காய்ச்சலில் இறந்தவர்கள் எத்தனை பேர்? 4 நாள்களில் தெரியும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

காய்ச்சலால் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் 4 நாள்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமில் டெங்கு ஒழிப்பு பணிகளுக்கான உபகரணங்கள், வாகனங்களின் பயன்பாட்டை தொடங்கி வைக்கிறார் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர்
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமில் டெங்கு ஒழிப்பு பணிகளுக்கான உபகரணங்கள், வாகனங்களின் பயன்பாட்டை தொடங்கி வைக்கிறார் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர்

காய்ச்சலால் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் 4 நாள்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
மருந்து வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் டெங்கு காய்ச்சல் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசியது:
காய்ச்சல் நோயாளிகளுக்கு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்குவதை மருந்தகங்கள் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் மருந்து விற்பனை உரிமம் பெற்ற 37,093 சில்லறை விற்பனை நிலையங்களும், 14,894 மொத்த விற்பனை நிலையங்களும் உள்ளன. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்வதைத் தடுக்கவும், போலி மருத்துவர்களுக்கு மருந்து விற்பனை செய்வதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 798 போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
காய்ச்சலால் உயிரிழப்பு என்று இல்லாத நிலையை தமிழகம் அடைவதற்கு மருந்து விற்பனையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கு நாள்களில் அந்த ஆய்வு நிறைவடைந்து, காய்ச்சலால் உயிரிழந்தோர் குறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளியிடப்படும் என்றார் அவர்.
சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆணையர் அமுதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, ஆவடி காமராஜர் நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சைதாப்பேட்டை மாந்தோப்பு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com