டெங்கு பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை

டெங்கு பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
டெங்கு பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை

டெங்கு பாதிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
கொளத்தூர் தொகுதியில் செம்பியம் ஆரம்ப சுகாதார நிலையம், அகரத்தில் சோமையா ராஜா ஆரம்ப சுகாதார நிலையம் சென்று டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளைச் சந்தித்து குறைகளை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: டெங்குவால் நிகழாண்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். உண்மையை ஓரளவாவது அவர் ஒப்புக்கொண்டதை வரவேற்கிறேன்.
ஆனால், டெங்கு காய்ச்சலால் இதுவரை 26 பேர் மட்டும் இறந்திருப்பதாகத் தவறான தகவலைக் கூறியுள்ளார்.
தினசரி 10 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். அதன்படி இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு பாதிப்பால் இறந்திருப்பதாக ஆதாரங்களுடன் செய்திகள் வந்துள்ளன. இதனை மூடி மறைக்கும் செயலில் அரசு ஈடுபட்டுள்ளது. 
மாநகராட்சிகளில் ஆங்காங்கு சேர்ந்துள்ள குப்பைகளை முன்கூட்டியே அகற்றி, நீர் நிலைகளை எல்லாம் முறையாகச் சுத்தப்படுத்தி பராமரித்து இருந்திருந்தால் டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
ஆனால், டெங்கு வந்திருக்கும் பகுதிகளில் மட்டும் வந்து, சுத்தம் செய்வது போன்ற பாவனைகள் செய்து வருகின்றனர். இந்த அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து முன்கூட்டியே டெங்கு காய்ச்சலைத் தடுக்காதது வெட்கக்கேடான செயல்.
வாக்கி டாக்கி: காவல்துறையினருக்கு வாக்கி டாக்கி வாங்குவதில் டெண்டர் விடுவதில் ரூ.88 கோடி ஊழல் செய்திருப்பதாக கடந்த 2 நாள்களாக செய்திகள் வந்துள்ளன. இதுதொடர்பாக டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் கடிதம் எழுதியிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.
புதிய ஆளுநர்: தமிழகத்தில் உள்ள இன்றைய அரசியல் சூழ்நிலை, இப்போதிருக்கும் ஆட்சி பெரும்பான்மையை இழந்திருக்கும் சூழலை எல்லாம் நன்கு அறிந்துதான் புதிய ஆளுநர் பதவியேற்க உள்ளார். அதற்குரிய நடவடிக்கையை நிச்சயம் அவர் எடுப்பார் என நம்புகிறோம். நீதிமன்றத்தின் மூலம் எங்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல தீர்ப்புக் கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com