சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பசுமை விருதுகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை அளித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள் வழங்கி கௌரவித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: 
மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாகச் செயலாற்றும் மாவட்ட ஆட்சியர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன், ஒவ்வோர் ஆண்டும் மூன்று பேருக்கு பசுமை விருதுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு விருதுகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளிக்கப்பட்டன. 2014-இல் கே.விவேகானந்தன் (தருமபுரி), கே.எஸ்.பழனிசாமி (தேனி), அர்ச்சனா பட்நாயக் (கோவை), 2015-இல் எஸ்.பிரபாகர் (ஈரோடு), பொ.சங்கர் (நீலகிரி), ச.ஜெயந்தி (கரூர்), 2016-இல்ஆசியா மரியம் (நாமக்கல்), ந.வெங்கடாசலம் (தேனி), அ.ஞானசேகரன் (திருவண்ணாமலை) ஆகியோருக்கு பசுமை விருதுகளை முதல்வர் பழனிசாமி அளித்தார்.
நிறுவனங்களுக்கு விருதுகள்: 2015-ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய "தி ராம்கோ சிமென்ட்ஸ்', கூடங்குளம் அணுமின் நிலையம், "மிசெலின் இந்தியா', "லேன்கோ தஞ்சாவூர் பவர்' ஆகிய நிறுவனங்களுக்கும், 2016-ஆம் ஆண்டில் கோஸ்டல் எனர்ஜன், ஹூண்டாய் மோட்டார்ஸ், டால்மியா ஆகிய நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள் வழங்கி கௌரவித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com