சேலத்தில் காய்ச்சலுக்கு 3 பெண் குழந்தைகள் சாவு

சேலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் 3 பெண் குழந்தைகள் உயிரிழந்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் 3 பெண் குழந்தைகள் உயிரிழந்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, புறநோயாளிகளாக வந்து சிகிச்சை எடுத்துச் செல்கின்றனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வியாழக்கிழமை முதல் தனி அவசர சிசிக்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 3 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் 6 வயது மகள் இலக்கியா, வியாழக்கிழமை உயிரிழந்தார். 
அதேபோல், கூட்டாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துசாமியின் 8 வயது மகள் கீர்த்தியும், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் 9 வயது மகள் அபினயா என்ற சிறுமியும் வியாழக்கிழமை உயிரிழந்தனர். ஒரே நாளில் 3 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com