யாருடனும் எனக்கு அதிகார மோதல் இல்லை: புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

யாருடனும் எனக்கு அதிகார மோதல் இல்லை என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
யாருடனும் எனக்கு அதிகார மோதல் இல்லை: புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி

யாருடனும் எனக்கு அதிகார மோதல் இல்லை என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: யாருடனும் எனக்கு அதிகார மோதல் இல்லை. ஒரே வேண்டுகோள்தான் என்னிடம் உள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தற்போது டெங்கு காய்ச்சலுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் போல, எல்லா விஷயத்திலும் இணைந்து செயல்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் சீரிய முறையில் செயல்படுகிறார்.

அனைத்துத் துறைச் செயலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளனர். எனவே, ஒருங்கிணைந்து செயல்பட தாமாகவே அனைவரும் முயல வேண்டும்.

மனித வளம் அல்லது நிதியைப் பயன்படுத்தி அவசரத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, வெளிப்படையான முறையில் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். பணம் மிகவும் நியாயமான முறையில் செலவு செய்யப்பட வேண்டும்.

அதிகாரிகள் களப்பணி ஆற்ற வேண்டும். தொடர்ந்து மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். இது நேர்மையான முறையில் செயல்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் கோப்புகளில் கையெழுத்திட கிரண் பேடிக்கு நேரமில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் எந்தக் கோப்பு உள்ளது என்று கூற முடியுமா? மாறாக, முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் அலுவலகங்களில்தான் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன.

அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான கோப்பு ஓராண்டு காலமாக அவர்களிடம் கிடந்தது. இது சோகமானது.

ஆனால், அதிகாரிகள் ஆளுநர் மாளிகையில் கோப்புகள் தேங்கியிருந்ததாக நினைத்தனர். தொடர்ந்து, குற்றச்சாட்டுகளைக் கூறுவதால் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். கோப்புகளின் தேதிகளைப் பாருங்கள்.

முதல்வர் சில மாதங்களும், தலைமைச் செயலர் 9 மாதங்களும் கோப்புகளை வைத்திருந்தது தெரியும்.

அவர்களுக்கு இதுகுறித்து எந்த வருத்தமும் இல்லை என்றார் கிரண் பேடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com