'ஆயுஷ் மருத்துவம் டெங்குவை குணப்படுத்தும்'

ஆயுர்வேத மருத்துவத்தை உள்ளடக்கிய ஆயுஷ் மருத்துவ முறையில் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்த முடியும் என்று ஆயுஷ் மருத்துவ நலச்சங்கத்தினர் கூறினர்.

ஆயுர்வேத மருத்துவத்தை உள்ளடக்கிய ஆயுஷ் மருத்துவ முறையில் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்த முடியும் என்று ஆயுஷ் மருத்துவ நலச்சங்கத்தினர் கூறினர்.
இதுதொடர்பாக இந்தச் சங்கத்தின் தலைவரும், மருத்துவருமான செந்தமிழ்ச் செல்வன், சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: 
அலோபதி மருத்துவத்தில் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களைக் குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், ஆயுஷ் மருத்துவ முறைகளால் 64 வகையான காய்ச்சல்கள் உள்பட 4,448 நோய்களைக் குணப்படுத்த முடியும்.
நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு உள்ளிட்டவற்றால் டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையில் மட்டுமே குணப்படுத்த முடியும். இதனை முழுமையாகக் குணப்படுத்த செந்தூரம் போன்ற ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
சித்த மருத்துவத்தில் அனைத்துவித காய்ச்சலுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், காய்ச்சல் நோயாளிகளுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கக் கூடாது என்றும், நோயாளிகளை நவீன முறை மருத்துவர்களிடம் பரிந்துரைக்க வேண்டும் என ஜூலை மாதம் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு தவறானது. சித்த மருத்துவத்தால் டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். 
எனவே, டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு, இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டெங்குவால் பாதிக்கப்பட்டோரை சித்த மருத்துவமனைகளில் அனுமதிக்காததுடன்,அவர்களுக்கு சிகிச்சை அளித்த 100 -க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் எனக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். 
இதனால், பெருகிவரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com