தீபாவளி பண்டிகை: புதுவை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை: புதுவை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணைநிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி:
தீபங்களின் விழா எனப்படும் தீபாவளி இந்திய மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீய சக்திகள் மீதான கடவுளின் வெற்றி, தர்மத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது. நல்ல செயல்கள் மூலம் நமது வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுவதை தீபாவளி குறிக்கிறது. இந்த தீபஒளி திருநாள் பொதுமக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளத்தை கிடைக்கச் செய்ய வேண்டும். புதுவை மாநில மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் நாராயணசாமி: 
தீபாவளி திருநாளை நம் நாட்டு மக்கள் தீபஒளி ஏற்றி மிக விமரிசையாக கொண்டாடுவார்கள். தீயவை அகன்று நல்லவை நடைபெற புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து குடும்பத்தினருடன் இந்நன்னாளை புதுவை மாநில மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடுவர். சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் கொண்டாடப்படும் விழா தீபாவளி. மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினரிம் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என நாம் ஒருங்கிணைந்து பாடுபடும் இவ்வேளையில் மக்கள் நலத்திட்டங்களை முடக்க சில சக்திகள் செயல்படுகின்றன அந்த தடைகளை களைந்து மாநிலத்தில் வளர்ச்சி பெறுவோம் என்ற சூளுரையை இந்நாளில் நாம் அனைவரும் ஏற்போம். 

வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான்: 
உலக மக்களை ஒன்றிணைக்கும் தீபத்திருநாளாம் இந்நன்னாளில் கடந்த கால கசப்பான எண்ணங்கள் புஸ்வாணம் போல அகன்று இனிமையான மத்தாப்பு போல் வண்ணங்கள் வாழ்வில் ஒளிவீசட்டும். இத்திருநாளில் புதுவை வாழ் மக்களின் உள்ளங்களிலும் அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் தீப ஒளியாய்ப் பரவட்டும். மக்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேறி வாழ்வாதாரம் உயர்ந்து தீமைகள் அகன்று புதுவை மாநில மக்கள் வாழ்நாளில் நன்மைகள் பெருக வாழ்த்துகிறேன்.

நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி: 
தீப ஒளித்திருநாளாம் இத்தீபாவளிப் பண்டிகையினை மொழி, மத, இன வேறுபாடின்றி சகோதரத்துவ மனப்பான்மையுடன் கொண்டாடி மகிழ்வோம். நாட்டின் முன்னேற்றத்துக்கும், மாநில வளர்ச்சிக்கும், முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வியாபாரிகள், மூத்தோர், பெண்கள், இளைஞர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் இந்த தீபாவளி திருநாளை குடும்பத்தோடு கொண்டாட வாழ்த்துகிறேன். காங் தலைவர் சோனியா, ராகுல் காந்தி வழியில் மாநிலத்தின் அனைத்து பிராந்திய மக்களுக்கும் நல்வாழ்த்துகள். 

ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.பி.:
இந்திய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த இந்த தீப ஒளித்திருநாளில் வாழ்வில் சூழ்ந்த இருள் விலகிட அனைவரது இல்லங்களிலும் தீமை எனும் இருள் அகற்றி நன்மை எனும் ஒளி தீபத்தை ஏற்றுவோம். 
மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, சமத்துவம், சகோதரத்துவம் போற்ற இந்நாளில் சபதமேற்போம் . நம் இன்னல்கள் அகல நம் எதிர்கால புதுச்சேரி வளமாக இந்த நன்னாளை நம்பிக்கை தீபாவளியாக இனிதே கொண்டாடி மகிழ்வோம். 

அரசுக் கொறடா அனந்தராமன்:
தீமை அழிந்து நன்மை வென்றதின் அடையாளமாக தீபாவளித் திருநாள் ஆண்டுதோறும் நாட்டு மக்களால் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது. தீப ஒளியானது இருளை விலக்கி வெளிச்சத்தை அளிப்பதைப் போல் மக்களிடையே வறுமை, இல்லாமை , ஏற்றத்தாழ்வு போன்ற இருள்கள் நீங்கி எல்லோரும் அனைத்து வளமும் பெற்றிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com