மும்பை சர்வதேச ஆவணப்பட விழாவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மும்பை சர்வதேச ஆவணப்பட விழாவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மும்பை சர்வதேச ஆவணப்பட விழாவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரம்: ஆவணப் படம், குறும்படம், அனிமேஷன் திரைப்படம் ஆகியவற்றிற்கான மும்பை சர்வதேச திரைப்பட விழா 2018 -க்கு நுழைவு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் திரைப்படப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள 2 ஆண்டுக்கு ஒரு முறையான இந்த திரைப்பட விழா மும்பையில் வரும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த விழாவில் சர்வதேச மற்றும் தேசிய போட்டி பிரிவுகளில் இடம் பெற 2015 செப்டம்பர் முதல் தேதி முதல் 2017 ஆகஸ்ட் 31 வரை தயாரிக்கப்பட்ட ஆவணப் படங்கள், 45 நிமிஷங்கள் வரையிலான குறும்படங்கள், ஓடும் நேரம் வரம்பு இன்றி அனிமேஷன் படங்கள் தகுதி பெற்றவை.
சர்வதேசப் போட்டிப் பிரிவுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவுக் கட்டணமாக 50 டாலரும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் ரூ. 1500-ம் செலுத்த வேண்டும். தேசியப் போட்டிப் பிரிவுகளுக்கு நுழைவுக் கட்டணம் ரூ. 1000 ஆகும். விழாவில் இடம் பெறுவதற்கான திரைப்படங்களுக்கு விண்ணப்பிக்க 2017 நவம்பர் 15 கடைசி நாளாகும். இது குறித்த முழு விவரங்களையும் ஜ்ஜ்ஜ்.ம்ண்ச்ச்.ண்ய் என்ற இணையதள முகவரியில் காணலாம்.
விருதுகள்: 15-ஆவது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் மிக உயரிய விருதின் மதிப்பு ரூ 5 லட்சத்திலிருந்து ரூ 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேசப் போட்டிப் பிரிவில், சிறந்த ஆவணப்படமாக தெரிவு செய்யப்பட்ட படத்துக்கு இந்த ரொக்க பரிசுடன் பெருமை மிகு தங்கச் சங்கு விருதும் வழங்கப்படும்.
சிறந்த குறும்படத்திற்கும் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கும் வெள்ளி சங்கு விருதும் ரூ 5 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படும். தேசியப் போட்டிப் பிரிவில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் ஆவணப் படங்களை 60 நிமிஷங்களுக்கு மேற்பட்டவை மற்றும் 60 நிமிஷங்களுக்கு உட்பட்டவை என்ற 2 பிரிவுகளில் அனுப்பிப் பங்கேற்கலாம்.
இந்த 2 பிரிவுகளிலும் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்படும் படம் ஒவ்வொன்றுக்கும் வெள்ளி சங்கு விருதும் ரூ 5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். சிறந்த குறும்படங்கள், சிறந்த அனிமேஷன் படங்கள் ஒவ்வொன்றுக்கும் வெள்ளி சங்கு விருதும் ரூ 3 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். சர்வதேசப் போட்டிப் பிரிவில், பிரமோத் பட்டி சிறப்பு நடுவர் விருது வழங்கப்படும். மகராஷ்டிரா மாநில அரசு நிறுவியுள்ள தாதாசாகேப் பால்கே சித்ரநாகரி விருது இயக்குநரின் மிகச் சிறந்த முதலாவது திரைப்படத்துக்கு வழங்கப்படும்.
படப்பதிவு, எடிட்டிங், ஒலிவடிவமைப்பு ஆகிய துறைகளில் தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்படும் என மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com