வீணாகக் கடலில் கலக்கும் பாலாற்று நீர்: அன்புமணி கண்டனம்

பாலாற்றின் நீர் வீணாகக் கடலில் கலப்பதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வீணாகக் கடலில் கலக்கும் பாலாற்று நீர்: அன்புமணி கண்டனம்

பாலாற்றின் நீர் வீணாகக் கடலில் கலப்பதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலாற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன் பயன்களை அறுவடை செய்வதில் நாம் தோல்வி அடைந்திருக்கிறோம்.
முதல்மடை பாசன மாநிலங்களில் கட்டப்பட்ட தடுப்பணைகளைத் தடுக்கத் தவறியதால் தமிழகத்துக்கு தண்ணீரே கிடைக்காமல் போய்விட்டது. கிடைத்த தண்ணீரையும் தடுப்பணைகளைக் கட்டி சேமிக்க தமிழகம் தவறிவிட்டது. பாலாற்றில் மணல் அள்ள தடை விதித்து, தடுப்பணைகளைக் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com