பொறையாறு பணிமனை விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பொறையாறு பணிமனை கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி வழங்க
பொறையாறு பணிமனை விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நாகப்பட்டினம்: பொறையாறு பணிமனை கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொறையாரில் அரசு போக்குவரத்து பணிமனைக் கட்டடம் உள்ளது. அதில் உள்ள பணிமனைக் கழக ஊழியர்களின் ஓய்வு அறையின் மேற்கூரை திடீரென நள்ளிரவு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் போக்குவரத்து கழக ஊழியர் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி ஒ!ருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. 

விபத்து குறித்து முதல்வர் பழனிசாமியிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என தெரிவித்தார். 

இந்நிலையில், பொறையாறு போக்குவரத்து பணிமனை விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com