ரயில் பயணச் சீட்டில் தமிழ் இல்லை: ஆங்கிலம் தெரியாத பயணிகள் அவதி

புறநகர் மின்சார ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச் சீட்டுகளில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே அச்சிட்டு வழங்கப்படுவதால் ஆங்கிலம் தெரியாத பாமர மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ரயில் பயணச் சீட்டில் தமிழ் இல்லை: ஆங்கிலம் தெரியாத பயணிகள் அவதி

புறநகர் மின்சார ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் பயணச் சீட்டுகளில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே அச்சிட்டு வழங்கப்படுவதால் ஆங்கிலம் தெரியாத பாமர மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பயணம் என்றாலே பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே முதலில் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக தொலைதூரங்களுக்கு செல்வோர் ரயில்களில் முன்பதிவு செய்து, பயணம் செய்கின்றனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் வசதிக்காக புறநகர் மின்சார ரயில் சேவை நடைமுறையில் உள்ளது. வேலைக்கு செல்வோர், தொழில் நிமித்தம் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பினரும் ரயிலில் அன்றாடம் சென்று வருகின்றனர்.
தினமும் பயணிப்போரின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் மாதாந்திர பயணச்சீட்டும் (சீசன் டிக்கெட்) வழங்கி வருகிறது. இதுதவிர ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்கி செல்வோரும் உண்டு. ஆரம்பத்தில் சிறிய அளவிலான மஞ்சள் அட்டையில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டன. அதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இந்தி மொழி அச்சிடப்பட்டிருக்கும்.
பிறகு மின்னணு பயணச்சீட்டுகள் அறிமுகப்படுத்தபட்டது. இதில் பயணிகள் புறப்படும் ஊர், சென்று சேரும் இடம், டிக்கெட் பெற்ற நேரம், தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். கணிப்பொறி மூலம் வழங்கப்படும் ரயில் பயணச்சீட்டுகளில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் புறக்கணிக்கப்பட்டும், ஊர்களின் பெயர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்பட்டும் வழங்கப்படுகின்றன.
புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகளை வழங்குவதால், தமிழில் மட்டுமே படிக்க தெரிந்த பாமர மக்கள் தாங்கள் பயணம் செய்யும், ஊருக்கு சரியான பயணச்சீட்டு வாங்கி செல்கிறோமா என்பது தெரியாமலே பயணம் செய்யும் நிலை உள்ளது. மேலும், ரயில் பயணச்சீட்டில் மாநில மொழி இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது மொழி ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, ரயில் பயணச் சீட்டுகளில் தமிழ் மொழியில் விவரங்கள் இடம்பெற தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com