குட்கா விவகாரம்: திமுக எம்எல்ஏ-க்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

குட்கா விவகாரம் தொடர்பான நோட்டீஸ் மீது 21 திமுக உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை வழக்கு தொடர்ந்தனர்.
குட்கா விவகாரம்: திமுக எம்எல்ஏ-க்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சட்டப்பேரவையில் குட்காவைக் காண்பித்தது குறித்து பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

இந்த நோட்டீஸூக்கு விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமையுடன் (செப்.5) முடிவடைய உள்ளது. 

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்.5) நடைபெற்றது. 

நோட்டீஸ் பெறப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பேரவைத் தலைவர் அனுப்பியுள்ள நோட்டீஸ் சட்டத்துக்கு உட்பட்டதாகத் தெரியவில்லை. அதனால், இதுகுறித்து விளக்கம் அளிக்க 15 நாள்கள் அவகாசம் அளிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரவைத் தலைவர் நடவடிக்கை மீது வழக்கு தொடர்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com