அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள எத்தனை பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது தெரியுமா?

அதிமுகவின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் இன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள
அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள எத்தனை பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது தெரியுமா?

சென்னை: அதிமுகவின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் இன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள எத்தனைபேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, சிறப்பு அழைப்பாளராக யார் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் நிர்வாகிகள் என்ற பெயரில் கூட்டப்படும் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? என கட்சியினரிடையே பெரும் விவாதமாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை நடத்தத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை இரவு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் இயற்றப்படும் தீர்மானங்கள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து மகிழ்ச்சி அடைந்த இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்கு வேண்டிய ஏற்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பம்பரமாக பணியாற்றி வருகின்றனர்.

இன்று நடைபெறும் பொதுக்குழுவிற்கு 2,140 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் நடக்கவுள்ள செயற்குழு கூட்டத்தில் 296 பேர் பங்கேற்கவுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினர்கள் என யாரும் அழைக்கப்படவில்லை. அழைப்பிதழ்கள் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களை கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், 'கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து, சசிகலா அதிரடியாக நீக்கப்படுவார்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com