பேரவையைக் கூட்டினால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

சட்டப்பேரவையைக் கூட்டினால் அரசுக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பேரவையைக் கூட்டினால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

சட்டப்பேரவையைக் கூட்டினால் அரசுக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: அதிமுக ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லை என்று ஆளுநரைச் சந்தித்து முறையிட்டோம். ஆளுநர் தனது கடமையை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறினோம். அதன்படி, ஜனநாயக முறையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்குச் சென்று வழக்குத் தொடுத்துள்ளோம். ஆட்சியாளர்கள் பெரும்பான்மை இருக்கிறது என்று கூறுகிறார்கள். அப்படிப் பெரும்பான்மை இருக்கிறது என்றால், சட்டப்பேரவையைக் கூட்டக்கூடிய அதிகாரம் ஆளுநருக்குத்தான் இருக்கிறது. ஒருவேளை, முதல்வருக்கு தன் மீதான நம்பிக்கையை நிரூபிக்கக்கூடிய தைரியம் இருந்தால், அவரே ஆளுநரிடம் பரிந்துரை செய்தால் சட்டப்பேரவையைக் கூட்டுவார்கள். அப்படிக் கூட்டினார்கள் என்றால், நிச்சயமாக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும்.
திமுகவுக்கும் எங்களுக்கும் மட்டுமே போட்டி என்று டிடிவி தினகரன் கூறியது குறித்துக் கேட்கிறீர்கள். அவருடைய விளம்பரத்துக்காக அப்படிச் சொல்லலாம். அதற்கு நான் விளம்பரம் சேர்க்க விரும்பவில்லை. திமுக என்றைக்கும் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர விரும்பியது இல்லை. வரவும் வராது.
சி.பா.ஆதித்தனார் சிலை: சென்னை எழும்பூரில் இருந்த சி.பா.ஆதித்தனார் சிலையை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அகற்றியுள்ளது கண்டனத்துக்குரியது. உடனடியாக சி.பா. ஆதித்தனார் சிலையை மீண்டும் அங்கே நிறுவ வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com