ஓமலூர் பெண்ணுக்கு நடிகை புகைப்படத்துடன் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு

ஓமலூர் அருகே பெண்ணுக்கு நடிகை காஜல் அகர்வால் புகைப்படத்துடன் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 
ஓமலூர் அருகே சரோஜா என்ற பெண்ணுக்கு நடிகை காஜல் அகர்வால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு.
ஓமலூர் அருகே சரோஜா என்ற பெண்ணுக்கு நடிகை காஜல் அகர்வால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு.

ஓமலூர் அருகே பெண்ணுக்கு நடிகை காஜல் அகர்வால் புகைப்படத்துடன் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 
ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம், ஆர்.சி.செட்டிப்பட்டி கோமாளி வட்டம் பகுதியில் வசிப்பவர் பெரியசாமி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு வளர்மதி, ராமச்சந்திரன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், பெரியசாமி குடும்பத்துக்கு பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதில், பெரியசாமியின் மனைவி சரோஜாவை குடும்பத் தலைவர் என்று குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் குடும்ப அட்டையில், சரோஜா படத்துக்குப் பதிலாக பிரபல சினிமா நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, குடும்ப அட்டையை சரோஜாவிடம் வழங்கிய நியாய விலைக் கடை ஊழியர், குடும்ப அட்டையில் உள்ள தவறைத் திருத்தம் செய்து தருவதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஸ்மார்ட் குடும்ப அட்டையைப் பார்த்த சரோஜா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களிலும், கட்செவிஅஞ்சலிலும் பரவியது. 
இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர்களிடம் கேட்டபோது, ஸ்மார்ட் குடும்ப அட்டையில் சரோஜா படத்துக்குப் பதிலாக நடிகையின் படம் தவறாக அச்சிடப்பட்டுள்ளது உடனடியாக மாற்றிக் கொடுக்கப்படும். மேலும், அவருக்கு ரேஷன் பொருள்கள் தடையின்றி வழங்கப்படும் என்றார். 
இதையடுத்து, சரோஜா குடும்பத்தினரிடமிருந்து ஸ்மார்ட் குடும்ப அட்டையை வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் உடனடியாக பெற்றுச் சென்றனர். இதையடுத்து, புதன்கிழமை சரோஜாவின் புகைப்படம் அச்சிடப்பட்ட புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை அவரிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com