நவோதயா பள்ளிகளை தடுப்பது கிராமத்து குழந்தைகள் படித்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தானா? தமிழிசை கேள்வி

நவோதயா பள்ளிகளை தடுப்பது அரசியல்வாதிகளின் குழந்தைகளுக்கு இணையாக கிராமத்து குழந்தைகள் படித்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தானா? என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், கிராமத்து தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 40 சதவீத அளவுக்குமேல் அனைத்தும் இலவசம் உறைவிடம் உணவு, உடை உட்பட! இவர் எதிர்ப்பது ஏன்?. நவோதயா பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம்வகுப்பு வரை தமிழ் கட்டாயம், 11 ,12 வகுப்புகளில் விருப்ப மொழியாக தமிழ், இந்தி, ஆங்கிலம். எங்கே திணிப்பு?. மத்திய அரசு ரூ. 20 கோடி நிதி உதவி வழங்கும்.  

நவோதயாவில் நீட் எழுதிய 14183 பேரில் 11875 பேர் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிகளில்! அரசுப் பள்ளி 5 பேர் மட்டுமே. நவோதயா பள்ளிகளை தடுப்பது தமிழகத்தில் அரசியல்வாதிகளின் குழந்தைகளுக்கு இணையாக கிராமத்து குழந்தைகள் படித்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தினால்தானா?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com