கர்நாடகத்தில் அடைக்கப்பட்டிருக்கும் எம்எல்ஏ-க்களை வெளியே விடத் தயாரா? தினகரனுக்கு முதல்வர் சவால்

கர்நாடகத்தில் உள்ள எம்எல்ஏ-க்களை வெளியே விடத் தயாரா என்று டிடிவி தினகரனுக்கு முதல்வர்எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.

கர்நாடகத்தில் உள்ள எம்எல்ஏ-க்களை வெளியே விடத் தயாரா என்று டிடிவி தினகரனுக்கு முதல்வர்எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எம்எல்ஏக்களைவெளியே விட்டால் அவர்கள் எங்களோடு சேர்ந்துவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 109-ஆவது பிறந்தநாள் விழா சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே சனிக்கிழமை (செப்.15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக வடசென்னை வடக்கு மாவட்டசெயலாளர் பாலகங்கா தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
நான் 9 முறை தேர்தலில்போட்டியிட்டேன்; 6 முறை வெற்றி பெற்றேன். ஒரு முறை எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன்; மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் எனக்கு சீட் கொடுத்தார், அவருடைய செல்வாக்காலும் மக்கள்ஆதரவாலும் வெற்றி பெற்றேன். நீங்கள் ஒரே நாளில் உறுப்பினராகி கட்சியையும் ஆட்சியையும் பிடித்து விடலாம் என்று நினைக்கீறீர்கள்; உங்களுடைய கனவு பலிக்காது. அதிமுகவை எவராலும் அசைக்க முடியாது.
நான் பலமுறை போராட்டங்களை நடத்தியிருக்கிறேன் . மறைந்த முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்தில் இருந்துதிரும்பிய போது அவர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது. அதற்காக போராட்டம் நடத்தி 10 நாள்கள் சிறையில் இருந்தேன்; 6 முறை நான் சிறைக்கு போயிருக்கிறேன்; நான் கட்சிக்காக போராட்டம் நடத்தி சிறைக்குப் போனேன்.
நாங்கள் நடத்துவது பெரும்பான்மை ஆட்சி..: குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களின் ஆசை ஒரு போதும் நிறைவேறாது. நீங்கள் எம்எல்ஏக்களை அறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்; அவர்களை வெளியே விட்டுப் பாருங்கள்; எங்களோடு வந்து சேர்ந்துவிடுவார்கள்; நாங்கள் பெரும்பான்மை ஆட்சி நடத்துகிறோம்; 96 எம்எல்ஏ-க்களுடன் மைனாரிட்டி ஆட்சி நடத்திய திமுகவுக்கு எங்களைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. கட்சியை உடைக்கவும் ஆட்சியைக் கவிழ்க்கவும் திமுவோடு சேர்ந்து தினகரன் நாடகம் நடத்துகிறார் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com