பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ஜி.கே.வாசன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ஜி.கே.வாசன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
சு.திருநாவுக்கரசர்: சமீபகாலமாக பெட்ரோலியப் பொருள்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறைந்தாலும் பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்து இதுவரை 11 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் கலால் வரியை பலமடங்கு கூட்டி, மத்திய அரசு கஜானாவை நிரப்பி வருகிறது. இதன்மூலம் நிதி பற்றாக்குறையை மூடிமறைக்க முயற்சிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக விலைவாசி உயரும், மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
ஜி.கே.வாசன்: எண்ணெய் நிறுவனங்கள் தற்போது நாள்தோறும்
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு விலையை நிர்ணயம் செய்கின்றன. இதில், மத்திய அரசு தலையிடாது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளது முறையில்லை. பொதுமக்களின் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
எனவே, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். ஜிஎஸ்டி மசோதாவின் முன் அறிக்கையில், பெட்ரோல், டீசலுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரி விதிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ஏற்கெனவே மறைமுகமாகப் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர் மீது புதிதாக ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்து நேரிடையாகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com