காவிரி மகா புஷ்கர விழாவில் காவிரி நதிக்கு மகா தீபாராதனை

காவிரி மகா புஷ்கர விழாவின் 5-ஆவது நாளையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி நதிக்கு மகா தீபாராதனை சனிக்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து ஏராளமானோர் காவிரியில் புனித நீராடினர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டம் காவிரிஆற்றில் இருகரைகளை தொட்டு ஓடும் தண்ணீரில் புனிதநீராடும் பக்தர்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டம் காவிரிஆற்றில் இருகரைகளை தொட்டு ஓடும் தண்ணீரில் புனிதநீராடும் பக்தர்கள்.

காவிரி மகா புஷ்கர விழாவின் 5-ஆவது நாளையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி நதிக்கு மகா தீபாராதனை சனிக்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து ஏராளமானோர் காவிரியில் புனித நீராடினர்.
காவிரி மகா புஷ்கர விழா செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தினமும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் அருகே பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி வருகின்றனர். 
இந்நிலையில், அம்மாமண்டபம் அருகே அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் சனிக்கிழமை காலை வருண ஹோமம், தன்வந்த்ரி இஷ்டி, பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. 
மாலை சுமார் 5 மணியளவில், காவிரி நதிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காவிரியில் புனித நீராடி வழிபட்டனர். தொடர்ந்து சாந்தி ஹோமமும், பக்தி இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 
இருகரை தொட்டு ஓடும் தண்ணீர்: காவிரி மகா புஷ்கர விழாவுக்காக மேட்டூர் அணையிலிருந்து 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திருச்சி காவிரியில் சனிக்கிழமை முதல் இருகரைகளையும் தொட்டபடி ஓடுகிறது. இதற்காக ஆற்றில் கட்டப்பட்டிருந்த தடுப்புகட்டைகளுக்குள் மட்டுமே பக்தர்கள் நீராட அனுமதித்தனர். மேலும், ஒரே நேரத்தில் கும்பலாக ஆற்றில் இறங்குவதையும் கட்டுப்படுத்தி பகுதிப் பகுதியாக அனுமதித்தனர். தீயணைப்புத் துறையினர் படகில் சென்றபடி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com