"மாணவி அனிதா தற்கொலை: ஆட்சியர், எஸ்.பி. தலைமையில் விசாரணைக் குழு'

மாணவி அனிதா தற்கொலை சம்பவம் குறித்து விசாரிக்க, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின்

மாணவி அனிதா தற்கொலை சம்பவம் குறித்து விசாரிக்க, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன்.
நீட் தேர்வு தோல்வியால் மருத்துவ படிப்பில் இடம்கிடைக்காத விரக்தியில், அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் அனிதா கடந்த 1 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், பல்வேறு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் மதியழகன், முதுநிலை விசாரணை அலுவலர்கள் இனியன், விஸ்டர் ஆகியோர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை குழுமூர் கிராமத்துக்கு நேரில் சென்று, தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தினரிடமும், பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
பிறகு, எல். முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: மாணவி அனிதாவுக்கு கால்நடை மற்றும் வேளாண் படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால், மருத்துவ படிப்பு கிடைக்காததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மாணவி அனிதா மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார் என வந்த புகாரின் பேரில், தேசிய ஆதிதிராவிட நல ஆணையம் தன்னிச்சையாக எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளது.
மருத்துவம் படிக்க வேண்டிய மாணவி, தற்கொலை செய்துகொண்டதால் ரூ. 25 லட்சமாவது நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்வோம். மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரிக்க, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என்றார். 
ரூ. 1 லட்சம் நிதியுதவி: இந்நிலையில், புரட்சி பாரத கட்சியின் நிறுவனர் பூவை ஜெகன்மூர்த்தி, அனிதாவின் குடும்பத்தினரை சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com