மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை நிறைவடையும் காலம் நெருங்குவதால் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மழைப் பொழிவு குறைந்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: மேற்கு மத்திய வங்கக்கடல் முதல், வடக்கு ஆந்திரம் வரை உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், வெப்பச்சலனத்தின் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தனர்.
சனிக்கிழமை காலை வரையான மழை பதிவு நிலவரம் (மி.மீட்டரில்): நீலகிரி மாவட்டம் தேவாலா - 40, திருபுவனம் - 30, வால்பாறை - 20, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வேலூர் மாவட்டம் ஆங்காயம் - 10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com