"வாய்தா' கேட்பதைத் தவிர்க்க வேண்டும்: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுரை

வழக்குகள் தேங்குவதைத் தடுக்க வாய்தா வாங்குவதை வழக்குரைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுரை வழங்கினார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற உயர் நீதிமன்ற பாரம்பரிய கட்டடத்தின் 125-ஆவது ஆண்டு விழாவில், புனரமைக்கப்பட்ட சென்னை அருங்காட்சியகத்தை திறந்து வைத்துப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, உச்ச
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற உயர் நீதிமன்ற பாரம்பரிய கட்டடத்தின் 125-ஆவது ஆண்டு விழாவில், புனரமைக்கப்பட்ட சென்னை அருங்காட்சியகத்தை திறந்து வைத்துப் பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, உச்ச

வழக்குகள் தேங்குவதைத் தடுக்க வாய்தா வாங்குவதை வழக்குரைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுரை வழங்கினார்.
பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்தின் 125-வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பங்கேற்றார். சென்னை உயர் நீதிமன்றம் தொடர்பான புத்தகத்தை அவர் வெளியிட, உச்ச நீதிமன்ற நீதிபதி அகர்வால் பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பேசியதாவது:-நீதிமன்ற விசாரணை நடைமுறைகளில் மூன்று முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
முதலாவதாக, நீதிமன்ற விசாரணைகள் உரிய நேரத்தில் தொடங்கப்பட வேண்டும். நீதிமன்றத்துக்கு வருவதில் காலதாமதம் இருக்கவே கூடாது. நீதிமன்றத்தில் நேரத்தைப் பராமரிப்பது என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை சட்டமாகும். எனவே நீதிபதி மற்றும் வழக்குரைகள் காலதாமதம் செய்வது, அந்த சட்டத்தை மீறுவதாக அமைந்துவிடும்.
ஒத்திவைக்கும் நோய்: வழக்குகளை தள்ளி வைக்கக் கோரும் நோய்க்கு வழக்குரைஞர்கள் ஆளாகக் கூடாது. இந்த நோய்த்தன்மைக்கு எதிரான நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். இது வழக்குரைஞர்களுக்கு மட்டுமல்ல நீதிபதிகளும் பின்பற்றப்பட வேண்டிய அறிவுரையாகும். நீதிபதிகளுக்கு இருக்கும் சில தன்மைகள் பற்றியும் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இழுத்தடிக்கும் மனப்பான்மை வேண்டாம்: வழக்குகளை இழுத்தடிக்கும் மனப்பான்மையை வழக்குரைஞர்கள் வளர்த்துக் கொள்ளக் கூடாது. சில வழக்குகளில் கவனமாக முன்தயாரிப்புகள் அவசியமாக வேண்டியுள்ளது. எல்லா வழக்குகளிலும் அப்படி இருப்பதில்லை. எனவே எப்போதுமே நீதிமன்றத்துக்கு தயார் நிலையிலேயே வர வேண்டும். அவ்வாறு வந்த பிறகு வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரக் கூடாது.
நீதிபதிகளில் யாராவது ஒருவர் வழக்கை தள்ளி வைப்பதற்கு முன்வந்தால், நீங்கள் அமைதியாக, ""நான் வாதிடத் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயவு செய்து வாதத்தைக் கேளுங்கள்'' என்று சொல்லுங்கள். அவ்வாறு கூறினால் அதனை நீதிபதி கண்டிப்பாக கேட்பார் என்றார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. 
நிலுவை வழக்குகளை முடிக்க இலக்கு: 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை இலக்கு நிர்ணயித்து முடிக்க வேண்டுமென மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.
விழாவில் அவர் பேசியதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2.97 லட்சமாகும். மாவட்டங்கள் மற்றும் இதர நீதிமன்றங்களில், 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவற்றில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 916. மாவட்டங்கள் மற்றும் இதர நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 721. ஒரு இலக்கினை நிர்ணயித்து இந்த வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசு தொடர்பான வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். 
126 நீதிபதிகள் நியமனம்: வழக்குகள் மற்றும் இதர நீதித் துறை தொடர்பான ஆலோசனைகளுக்காக நாட்டில் 2.7 லட்சம் பொது சேவை மையங்கள் செயல்படுகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் 126 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதுவரை இந்தியாவில் ஒரே ஆண்டில் இந்த அளவுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதில்லை. இந்த ஆண்டு இறுதியில் நீதிபதிகளின் நியமன எண்ணிக்கை 175 -ஆக இருக்கும்.
சென்னை உயர் நீதிமன்றத்தைப் பொருத்தவரையில், கடந்த ஆண்டு 22 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 6 பேர் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். புதிதாக நியமனம் செய்ய 11 பரிந்துரைகள் வந்துள்ளன. 
இளம் வழக்குரைஞர்களுக்காக...இளம் வழக்குரைஞர்களுக்காக ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தில் அவர்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்யலாம். இதைத் தொடர்ந்து, தேவைப்படுவோருக்கு இளம் வழக்குரைஞர்களின் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும். கடந்த 3 மாதங்களில் 158 வழக்குரைஞர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.

"வழக்குரைஞர் ஆகாததில் ஜெயலலிதாவுக்கு வருத்தம்'

தான் ஒரு வழக்குரைஞர் ஆகாதது வருத்தம் அளிப்பதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னிடம் தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அவர் மேலும் பேசியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் அரசியல்ரீதியாக மிகவும் நெருங்கி பணியாற்றியுள்ளேன். 
உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அவரது வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளேன்.
அவருடன் வழக்குகள் குறித்து விவாதிக்கும்போது, அதன் சாதக பாதகங்களை அவரும் குறிப்பிடுவார். ஒரு முறை அதுபோன்ற விவாதத்தின்போது உங்களுக்கு (மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு) சட்ட அறிவு நிரம்ப இருப்பதாகக் கூறினேன். அதற்கு அவர், "நான் வழக்குரைஞராக இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது' என்று தெரிவித்தார். 
அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com