இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையம் அக்.5-இல் விசாரணை

அதிமுக இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக அக்டோபர் 5-ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையம் அக்.5-இல் விசாரணை

அதிமுக இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக அக்டோபர் 5-ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இ.மதுசூதனன், ஓ. பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: 
இந்த விவகாரம் தொடர்பாக ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவின் எந்த அணிக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) உத்தரவிட்டது. 
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பர் 29-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. மேலும், இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை அக்டோபர் 5-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். 
எனவே, நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களோ அல்லது அவர்கள் சார்பில் வழக்குரைஞர்களோ விசாரணைக்கு ஆஜராகலாம். இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி நிலவரப்படி உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த அணிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com