கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ரூ.278 கோடியில் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ரூ.278 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ரூ.278 கோடியில் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ரூ.278 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
மத்திய அரசின் 'தூய்மையே சேவை' இயக்கத்தின்கீழ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.திட்டத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
ஒவ்வொரு நாளும் ஒரு மருத்துவமனை வளாகம் என்ற அடிப்படையில், இந்த மேம்பாட்டுப் பணிகள் நடத்தப்படவுள்ளன. இதன்மூலம் அனைத்து மருத்துவமனை வளாகங்களும் முழுமையான பராமரிப்பின்கீழ் பசுமையாகவும் தூய்மையாகவும் இருக்கும். 
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சென்னையின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்று. இந்த மருத்துவமனையைத் தரம் உயர்த்தும் வகையில் 'ஜைக்கா' என்ற திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார். அந்தத் திட்டத்தின்கீழ் ரூ.141 கோடியில் கட்டடம், ரூ.137 கோடியில் மருத்தவ உபகரணங்கள் என மொத்தம் ரூ.278 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இந்த மருத்துவமனை உயர்தர சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.
ஜைக்கா என்பது வளர்ந்த மேலை நாடுகளுக்கு இணையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரும் திட்டமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.278 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் 
கல்லூரி முதல்வர் வசந்தா மணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com