தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படையினர் தயார் நிலையில் இருக்க டிஜிபி 'திடீர்' உத்தரவு

தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படையினர் தயார் நிலையில் இருக்க டிஜிபி 'திடீர்' உத்தரவு

தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் 'திடீர்' உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை: தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் 'திடீர்' உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக டிஜிபி  அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விதமான சிறப்புக் காவல் படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று இதன் மூலம் அறிவுறுத்தபப்டுகிறது. குறிப்பாக 19 மாவட்டங்களில் உள்ள சிறப்புக் காவல் படைகள் உச்ச பட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த தகவலானது மாநகர காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் வழி அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அசாதாரணமான சூழ்நிலைகளில்தான் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதால் காவல்துறை வட்டாரங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, திமுக கொறடா சக்கரபாணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதால், அசம்பாவிதங்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருக்கலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com