குன்னூரில் தொடர் மழை: மலைக் காய்கறிகள் அழுகும் நிலை

குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மலைக் காய்கறிகள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குன்னூரில் தொடர் மழை: மலைக் காய்கறிகள் அழுகும் நிலை

குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மலைக் காய்கறிகள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குன்னூர் சுற்று வட்டாரப்  பகுதிகளில் கடந்த ஆண்டில் மழைப் பொழிவு குறைந்து ஏற்பட்ட வறட்சியால் மலைக் காய்கறி விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு ஆண்டு தொடக்கத்திலிருந்து அவ்வப்போது பெய்த மழையால் தேயிலை, மலைக் காய்கறி தோட்டங்களுக்கு ஏற்ற காலநிலை நிலவி வந்தது.

நடப்பு ஆண்டு கடைபோக விவசாயத்தையொட்டி, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்கள் பல்வேறு பகுதிகளில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மிதமாக பெய்து வந்த மழை, கடந்த இரண்டு வாரங்களாக வலுத்துள்ளது. இதனால், மண் சரிவு ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்து வருகின்றன.

மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்பதால் மலைக் காய்கறிகள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது.  எனவே, தோட்டக் கலைத் துறையினர் ஆய்வு செய்து, மாற்று மருந்தினைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலேசனை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com