திமுகவுடன் டிடிவி தினகரன் ரகசிய கூட்டணி: எம்.பி., வேணுகோபால் குற்றச்சாட்டு

திமுகவுடன் டிடிவி தினகரன் ரகசிய கூட்டணி வைத்து, ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளார் என திருவள்ளூர் எம்.பி., டாக்டர் பி.வேணுகோபால் குற்றம்சாட்டினார்.
கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய எம்.பி., டாக்டர் பி.வேணுகோபால்.
கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய எம்.பி., டாக்டர் பி.வேணுகோபால்.

திமுகவுடன் டிடிவி தினகரன் ரகசிய கூட்டணி வைத்து, ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளார் என திருவள்ளூர் எம்.பி., டாக்டர் பி.வேணுகோபால் குற்றம்சாட்டினார்.
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பெதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மாவின் வழிகாட்டுதலின் படி, அதிமுகவின் இரு பிரிவுகளும் இணைந்துள்ளன. ஜெயலலிதாவின் நல்ல திட்டங்களை பின்பற்றி, அதிமுக ஆட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆட்சியை கவிழ்க்க அதிமுகவின் பரம எதிரியான திமுகவோடு டிடிவி தினகரன் கூட்டணி வைத்து செயல்படுகிறார். அவர்களின் முயற்சி ஈடேறாது. ஜெயலலிதா இந்த ஆட்சி மக்களின் ஆதரவோடு தொடர்ந்து செயல்படும் என்றார். இக்கூட்டத்துக்கு எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கோபால்நாயுடு, பி.ரவிச்சந்திரன், கந்தசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி ஷியாமளா தன்ராஜ் வரவேற்றார். 
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பொன்னேரி எம்எல்ஏவுமான சிறுணியம் பி.பலராமன், அதிமுக பாசறை இணைச் செயலாளர் ராஜலட்சுமி, தலைமைக்கழக பேச்சாளர் பூதூர் மணி, பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் உள்ளிட்டோர் பேசினர்.
விழாவில், அண்ணா பிறந்தநாளை ஒட்டி ஏழை, எளியோர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் கே.எம்.எஸ்.சிவக்குமார், ரமேஷ்குமார், சதீஷ், லோகாம்பாள் கருணாகரன், அதிமுக நிர்வாகிகள் எஸ்.டி.டி.ரவி, திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் மு.க.சேகர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com