மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை: திருமாவளவன் பேட்டி

ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நான் பார்க்கவில்லை என திருமாவளவன் கூறினார்.

திருச்சி: ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நான் பார்க்கவில்லை என திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பார்ப்பதற்காக சென்றேன்.

ஆனால், அங்கு நான் அவரை பார்க்கவில்லை. அங்கு வந்திருந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்தேன். அவர்களிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு வந்தேன். தற்போது அமைச்சர்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து முன்னுக்கு பின் முரணான முறையில் பேசி வருகின்றனர்.

ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் அமைச்சர்கள் துரோகம் செய்யக் கூடாது. ஜெயலலிதா மரணம் குறித்து 6 மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றதற்கு விடுதலை சிறுமை கட்சி சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்ற. டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பற்ற வேண்டும். 

மத்திய அரசின் செயல்பாட்டுக்கு யார் உடன்படவில்லையோ அவர்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர்களின் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு மீது திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

மேலும் சட்டப்பேரவை, மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com