வைகோ மீது தாக்குதல் முயற்சி: தலைவர்கள் கண்டனம்

ஐ.நா.வில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்

ஐ.நா.வில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கி.வீரமணி: ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், அங்கு நடந்த இனப்படுகொலைகள் குறித்தும், நீதி விசாரணை பற்றியும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் வைகோ முழங்கியுள்ளார். அதனைப் பொருத்துக் கொள்ள முடியாத சிங்களர்கள் அவரைத் தாக்க முயற்சித்துள்ளனர். 
இது கண்டனத்துக்குரியது. இந்தச் சம்பவத்துக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையமும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன்: மனித உரிமைகள் ஆணைய வளாகத்திலேயே வைகோ உடன் தகராறு செய்த சிங்களர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்த அராஜகத்தை இந்திய அரசு கண்டிப்பதுடன் எதிர்ப்பைத் தெரிவித்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நபருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
ஜவாஹிருல்லா: ஐ.நா. சபையிலேயே அனைவரின் முன்பு ஒரு தமிழனை சிங்களர்கள் தாக்க முயற்சித்திருக்கும்போது, இலங்கையில் தமிழர்கள் மீது எப்படிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கும் என்பதை உணர முடிகிறது. தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் போர்க் குற்ற விசாரணை தொடர்பாக ஐ.நா. அளித்த எந்த ஒரு உத்தரவாதத்தையும் நடைமுறைப்படுத்தாமல் அதுகுறித்துப் பேசிய வைகோவை தாக்க முயற்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com