எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான தடை தொடரும்; அரசின் மனு தள்ளுபடி

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான தடை தொடரும்; அரசின் மனு தள்ளுபடி


சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இடைக்காலத் தடையை உறுதி செய்தது.

மேலும், இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளில் 20% மாணவர்கள்தான் நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரே இடத்தில் மாணவர்கள் எத்தனை மணி நேரம்தான் உட்கார்ந்து கொண்டே இருப்பார்கள் என்றும் அரசு தாக்கல் செய்த விடியோவைப் பார்த்த நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதோடு, மாணவர்கள் பரிசு பெறுவதற்கும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதையும் யாரும் தடுக்க வேண்டாம். மாணவர்கள் பரிசு பெற பெற்றோருடன் செல்லலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்,  மனு தள்ளுபடி செய்யப்படுவதாக இன்று மாலை தீர்ப்பளித்தனர்.

முன்னதாக இந்த மனு மீதான விசாரணை இன்று காலை வந்த போது, அரசின் பெருமை பேசுவதே உங்களின் நோக்கம். பள்ளிக் குழந்தைகளின் சிரமங்களை விட, அரசின் பெருமை பேசுவதுதான் முக்கியமா? எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு சிபிஎஸ்இ மாணவர்களை ஏன் அழைத்துச் செல்லவில்லை. அவர்கள் எம்ஜிஆர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com