ஜெயலலிதா உடல்நிலை கண்காணிக்கப்படவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஆரம்ப நிலையிலேயே கண்காணிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உடல்நிலை கண்காணிக்கப்படவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஆரம்ப நிலையிலேயே கண்காணிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, 
ஜெயலலிதா உடல்நிலை பாதிப்புக்கள் குறித்து ஆரம்ப நிலையிலேயே கண்காணிக்காதது வருத்தம் அளிக்கிறது. மருத்துவ அறிக்கைப்படி ஜெயலலிதா சுவாசம் சீராக இருந்திருக்க வாய்ப்பில்லை. 

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்படாதது கவலை அளிக்கிறது. உடனடியாக ஆக்சிஜன் தரப்பட்டிருந்தால் மூச்சு திணறலைத் தவிர்த்திருக்கலாம்.

ஜெயலலிதாவின் சர்க்கரை அளவு முறையாக கண்காணிக்கப்பட்டதாக தெரியவில்லை. ரத்தத்தில் சர்க்கரை அளவு 508 எம்.ஜி. வரை செல்ல அனுமதிக்கப்பட்டது ஏன்?. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com