போயஸ் கார்டன் முதல் அப்பல்லோ வரை: செப்டம்பர் 26ம் தேதி இரவு நடந்தது என்ன?

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட  அதிகாரப்பூர்வ ஆவணம் ஊடகங்கள் வாயிலாக வெளியானது.
போயஸ் கார்டன் முதல் அப்பல்லோ வரை: செப்டம்பர் 26ம் தேதி இரவு நடந்தது என்ன?


சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட  அதிகாரப்பூர்வ ஆவணம் ஊடகங்கள் வாயிலாக வெளியானது.

அப்பல்லோவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது, அவரது உடல்நிலை எப்படி இருந்தது, அவர் போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு எப்படி கொண்டு வரப்பட்டார் என்பது குறித்த அனைத்துத் தகவல்களும் வெளியாகியுள்ளன.

அதாவது, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு போயஸ் கார்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து 3 மருத்துவர்கள் கொண்ட குழு போயஸ் கார்டன் விரைந்தது. அங்கு முதல் தளத்துக்கு சென்றனர்.

அங்கிருந்த அறையில் படுக்கையில் இருந்த ஜெயலலிதாவை மருத்துவர்கள் எழுப்ப முயன்ற போது அசைவு மட்டுமே இருந்தது. அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. 

உடனடியாக மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் உதவியோடு ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் அவரது உடலில் ரத்த அளவு அபாய அளவில் இருந்ததை உறுதி செய்கிறது.

அவரது உடலில் காயமோ, புண்களோ இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22ம் தேதி காலை மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவில் பங்கேற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை திடீரென இந்த அளவுக்கு மோசமடையக் காரணம் என்ன என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com