தமிழ் சமூகத்தை தனித் தமிழ் நாடு கேட்டு போராடவைத்துவிடாதீர்கள்: ஆ.ராசா

மத்திய, மாநில அரசுகள் தமிழ் சமூகத்தை தனித் தமிழ் நாடு கேட்கத் தூண்டாதீர்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழ் சமூகத்தை தனித் தமிழ் நாடு கேட்டு போராடவைத்துவிடாதீர்கள்: ஆ.ராசா

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு தரப்பில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன.

மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சி மாவட்டம் முக்கொம்புவில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கியது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் தொண்டர்கள் ஏராளமானோர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

முக்கொம்புவில் நடந்த காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் துவக்க நிகழ்ச்சியில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கட்சித் தலைவர் கி. வீரமணி ஆகியோர் தொண்டர்கள் மத்தியில் பேசினர். காவிரி உரிமை மீட்புப் பயணத்தை வீரமணி தொடங்கி வைத்து, ஸ்டாலினுடன் பயணத்தில் பங்கேற்றுள்ளார். 

காவிரி உரிமை மீட்புப் பயணத்தை அறிவிக்கும் வகையில் கொடியேற்றிவிட்டு பயணம் தொடங்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், மற்றும் ஏராளமான தொண்டர்களும் ஸ்டாலினுடன் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து தமிழ் சமூகத்தை தனித் தமிழ் நாடு கேட்கத் தூண்டாதீர்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக வெளிவந்துள்ள தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தவேண்டும். அது அமைக்கப்படும் வரை திமுக தொடர்ந்து போராடும். இந்த போராட்டம் மிக விரைவில் தனித் தமிழ் நாடு கேட்கும் நிலைக்கு தள்ளப்படலாம். எனவே மத்திய, மாநில அரசுகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். தமிழ் சமூகத்தை தனி தமிழ் நாடு கேட்டு போராடவைத்துவிடாதீர்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com