கடலில் கச்சா எண்ணெய் கொட்டிய விவகாரம்: 4 வாரத்துக்குள் இழப்பீடு வழங்க உத்தரவு

கப்பல்கள் மோதி கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வார காலத்துக்குள் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கப்பல்கள் மோதி கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 4 வார காலத்துக்குள் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவ தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார், மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை காமராஜர் துறைமுகத்தில் ஈரான் நாட்டைச் சேர்ந்த கப்பலும் எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற கப்பலும் மோதிக் கொண்டன. இதில் 196.4 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த எண்ணெய் படலம் பழவேற்காடு முதல் மாமல்லபுரம் வரை பரவியது. இதனால் மீனவர்களால் 20 நாள்களுக்கு மேல் மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை.
தீர்ப்பாயம் உத்தரவிட்டும்
கூட... தீர்ப்பாயம், கப்பல் நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு மீன்வளத் துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் பவானிசுப்ராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் கே.மகேஸ்வரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது மீன்வளத்துறை இயக்குநர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பாதிக்கப்பட்டவர்களை பல பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர்.
கப்பல் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தொகையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை அரசு பரிசீலித்து வருகிறது. 4 வார காலத்துக்குள் இந்தத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
விரைவில் இழப்பீடு: இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த இழப்பீடு குறித்த அறிக்கையை தாக்கல் செய்து விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அறிக்கையை விரைந்து பரிசீலித்து மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை 4 வார காலத்துக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com