மானியக் கோரிக்கைகளுக்கு தயாராகும் பேரவை: துறை வாரியாக ஆய்வுகள் தொடக்கம்

துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க சட்டப் பேரவை விரைவில் கூடவுள்ளது. மானியக் கோரிக்கையில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து துறை வாரியான ஆய்வுக்
பொதுப்பணித் துறையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
பொதுப்பணித் துறையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க சட்டப் பேரவை விரைவில் கூடவுள்ளது. மானியக் கோரிக்கையில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து துறை வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பேரவையின் ஒப்புதல் அவசியம்: சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஆறு மாதங்களுக்குத் தேவையான அரசின் செலவினங்களுக்கு பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் உள்ள புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் திட்டங்களை அறிவிக்கவும் துறை வாரியாக மானியக் கோரிக்கைகளுக்கு பேரவையில் ஒப்புதல் பெற வேண்டும்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பேரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில் மானியக் கோரிக்கைகளுக்காக சட்டப் பேரவை விரைவில் கூடவுள்ளது. ஒவ்வொரு நாளும் துறை வாரியாக விவாதங்கள் நடைபெற்று சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கோரும் நிதிக்கு பேரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தயாராகி வரும் அமைச்சர்கள்: பேரவையில் துறை வாரியாக விவாதங்கள் நடைபெறும் போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பக் கூடும். இவற்றுக்குப் பதில் அளிக்கும் வகையில், ஒவ்வொரு துறையின் அமைச்சரும் தயாராகி வருகிறார்கள்.
ஆலோசனைக் கூட்டங்கள்: பிரதான துறைகளான நெடுஞ்சாலைகள்-சிறு துறைமுகங்கள், பொதுப்பணித் துறை போன்ற முக்கிய துறைகளின் செயல்பாடுகள், திட்டங்கள் தொடர்பாக, அந்தத் துறைகளுக்கு பொறுப்பு வகிப்பவரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இதேபோன்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி உள்ளிட்ட பலரும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். 
இதையடுத்து, மே முதல் வாரத்தில் சட்டப் பேரவை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 25 நாள்கள் வரை கூட்டம் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com