காவிரி மேலாண்மை வாரியம்: 25 முதல் 29ம் தேதி வரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவ
காவிரி மேலாண்மை வாரியம்: 25 முதல் 29ம் தேதி வரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்


சென்னை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை காவிரி டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.

அரியலூர், நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

நாகையில் வரும் 25ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பார் என்றும், 28ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் நடைபெறும் இந்த பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் அமைச்சர்கள் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது பொதுக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com