மாவோயிஸ்டுகளின் புகைப்படம் வெளியீடு: கேரள எல்லையில் தேடுதல் வேட்டை

தேடப்படும் மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர், வால்பாறை வனப் பகுதி மற்றும் கேரள மாநில எல்லையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தேடப்படும் மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர், வால்பாறை வனப் பகுதி மற்றும் கேரள மாநில எல்லையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கேரள மாநில எல்லைகளில் சோதனைச் சாவடி அமைத்து அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் வனப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களும் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க காவல் துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
வால்பாறையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது கேரள மாநில எல்லை. சமீபகாலமாக வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அவ்வழியாக வந்து செல்கின்றனர். கேரள மாநில எல்லைப் பகுதியான சோலையாறு அணைப் பகுதியில் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த தங்கும் விடுதிகளில் கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்கள் தங்கி குற்றச் சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்று போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. 
இந்நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 32 மாவோயிஸ்ட்டுகளின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. வால்பாறை உட்கோட்டத்திற்கு உள்பட்ட வால்பாறை, காடம்பாறை, முடீஸ், ஷேக்கல்முடி ஆகிய காவல் நிலையங்களிலும் புகைப்படம் ஒட்டப்பட்டு, இப்படங்களைக் கொண்டு கேரள மாநில எல்லைப் பகுதி, மளுக்குப்பாறை எஸ்டேட் சோதனைச் சாவடி மற்றும் வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீஸார் துவங்கியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com