அனைத்துப் பத்திரிகையாளர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேள்: எஸ்.வி.சேகர் மீது பாரதிராஜா காட்டம்! 

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி முகநூலில் அவதூறாக பதிவிட்ட விவகாரத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களின் காலில் விழுந்து எஸ்.வி.சேகர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா.. 
அனைத்துப் பத்திரிகையாளர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேள்: எஸ்.வி.சேகர் மீது பாரதிராஜா காட்டம்! 

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் பற்றி முகநூலில் அவதூறாக பதிவிட்ட விவகாரத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களின் காலில் விழுந்து எஸ்.வி.சேகர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பெண் பத்திரிகையாளர் ஒருவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கன்னத்தில் தட்டிய விவகாரம் மிகுந்த சர்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக பெண் பத்திரிகையாளர்களின் நடத்தை பற்றி அவதூறாக கூறும் பதிவொன்றை, நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதன் காரணமாக அவருக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பத்திரிக்கையாளர்கள் சார்பாக அவருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அவரது வீட்டின் மீது கற்கள் எறியப்பட்டன.

பின்னர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி முகநூலில் அவதூறாக பதிவிட்ட விவகாரத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களின் காலில் விழுந்து எஸ்.வி.சேகர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

பத்திரிகையாளர்கள் பற்றி அதிலும் குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் கூறியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் வீட்டினுள் அறைக்குள் இருந்து கொண்டு அவர் வருத்தம் தெரிவித்தால் போதுமா?

எஸ்.வி.சேகர் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்துக்கு வர வேண்டும். அங்கு அனைத்து பத்திரிகையாளர்களும், அதிலும் பெண் பத்திரிகையாள சகோதரிகளும் வருவார்கள். அவர்களது காலில் விழுந்து எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com