அவசியம் ஏற்பட்டால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: கமல் பேட்டி! 

அவசியம் ஏற்பட்டால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
அவசியம் ஏற்பட்டால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: கமல் பேட்டி! 

சென்னை: அவசியம் ஏற்பட்டால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளான இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த மாதிரி கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது :

கிராம சபை என்பதை ஏதோ போர் அடிக்கும் ஒரு நிகழ்ச்சியாக நகரத்தில் இருப்பவர்கள் நினைக்கலாம். ஆனால் இது அனைவருக்குமானது. கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ. 1 முதல் ரூ. 5 கோடி வரை நிதியானது கிராம மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் 12,526 கிராமங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் கோடிகள் மூலம் பெருக்கிப் பார்த்தால் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி வரும். எனவே 5 ஆண்டுகள் என்றால் எவ்வளவு வரும் என்பதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

நமது கவனமின்மையால் செயல்படுத்த முடியாமல் போன கிராம சபை கூட்டத்தை, மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்துள்ளது.கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்..அவசியம் ஏற்பட்டால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்.

கிராம சபை கூட்டங்கள் காலகட்டத்திற்கு ஏற்ப மாறிவிட்டது, கிராமத்தினர் முன்னிலையில் வைத்து கணக்கு பார்க்க வேண்டும், அப்படி செய்யும் போது ஊழல் ஒழியும்.  ஊழல் ஒழிப்பு என்பது ஒரே நாளில் செய்வது அல்ல முதலில் குறைப்பு, பின்பு தடுப்பு அதற்கு பின்னர் தான் ஒழிப்பு. அதை செய்வதற்கான அற்புதமான கருவியை கையில் வைத்துக்கொண்டுதான் நாம் செய்யாமல் இருக்கிறோம்.

25 ஆண்டுகளாக இதுபோன்ற கிராம சபை கூட்டங்களை நடத்தி இருந்தால் தமிழகத்தின் முகமே மாறி இருக்கும்.இங்கு நாங்கள் நடத்தும் மாதிரி கிராம சபை கூட்டத்தை மக்களுக்கும் ஊடகங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். கிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது

கிராம சபைகளில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு விட்டால், அதை சட்டசபையிலும், பாராளுமன்றங்களிலும் நிறைவேற்ற முடியும்,  நீதிமன்றங்களும் நமக்கு ஆதரவளிக்கும். ஆனால் பிரித்தாளும் அரசியலின் காரணமாக கிராம பஞ்சாயத்துகள் வலுவிழந்துவிட்டன. அதை வலுப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com