அரக்கோணம் பணிமனை மேம்பாட்டுப் பணிகள்: விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

அரக்கோணம் பணிமனையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரக்கோணம் பணிமனை மேம்பாட்டுப் பணிகள்: விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

அரக்கோணம் பணிமனையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரக்கோணம் பணிமனையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் கீழ்க்கண்ட ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரக்கோணம்-வேலூர் இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் பயணியர் (பாசஞ்சர்) ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகின்றன.
 ஏப்.26, 27-ஆம் தேதிகளில் மாற்றம்: சென்னை சென்ட்ரல்-மங்களூரு இடையே இயக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (22637) சென்ட்ரலில் இருந்து நண்பகல் 12.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக புறப்படும்.
 சென்னை சென்ட்ரல்-கோவை இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12679) சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.
 சென்ட்ரல்-பெங்களூரு இடையே இயக்கப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ் (12607) சென்ட்ரலில் இருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும். சென்ட்ரல்-மும்பை இடையே இயக்கப்படும் சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரயில் (11042) ஏப். 28, 29, மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து மதியம் 12.20 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக 1 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்.
 சென்ட்ரல்-மும்பை இடையே இயக்கப்படும் சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரயில் (11042) வரும் மே 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்ட்ரலில் இருந்து நள்ளிரவு 11.55 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக 3 மணி நேரம் தாமதமாக புறப்படும்.
 அதேபோல, வரும் மே 6-ஆம் தேதி சென்னை-கோவை இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை-பெங்களூரு இடையே இருமார்க்கமாக இயக்கப்படும் பிருந்தாவன் மற்றும் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 90 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.
 கும்மிடிப்பூண்டிக்கு 2 ரயில்கள் ரத்து
 சென்னை, ஏப்.25: மின்பாதை பராமரிப்புப் பணி மேற்கொள்வதையொட்டி சென்னை மூர்மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் 2 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை அத்திப்பட்டு - மீஞ்சூர் இடையே உள்ள ரயில் பாதையில் மின்பாதை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதையொட்டி, சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு நாள்தோறும் நள்ளிரவு 12.15, அதிகாலை 2.45 மணிக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்கள் வியாழக்கிழமை (ஏப்.26) முதல் 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com