பார் கவுன்சில் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி புதன்கிழமை தொடங்கியது.
 தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான தேர்தல் கடந்த மார்ச் 28 -ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 192 பேர் போட்டியிட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் அனைத்தும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்குரைஞர்கள் சேம்பரின் மேல்தளத்தில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
 இந்த நிலையில், தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி விஜயராகவன் தலைமையில் வாக்கு எண்ணும் பணி புதன்கிழமை காலை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணும் பணி நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணும் மையத்துக்குள் முன் அனுமதி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஏஜென்ட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க தலைவரான ஜி.மோகனகிருஷ்ணன் கூறும்போது , "மாவட்ட வாரியாக வாக்குகள் எண்ணப்படும். அரியலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை புதன்கிழமை நடைபெற்றது; சென்னையில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் பணி முடிவடைய 30 நாள்களாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com