நிர்மலாதேவியுடன் தொடர்பை ஒப்புக்கொண்ட பல்கலை. ஆசிரியர்கள்

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்,

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர், தற்காலிக ஆசிரியர் ஆகியோரை நேருக்கு நேர் உட்கார வைத்து விருதுநகர் சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். அப்போது பேராசிரியை நிர்மலாதேவியுடன் தொடர்பு இருப்பதை இருவரும் ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவியை, 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சிக்கு சென்றபோது, விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த போது, தன்னை சந்தித்தவர்கள் பற்றிய விபரங்களையும் நிர்மலா தேவி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
 பேராசிரியர் ஒப்புதல்: இதுதவிர நிர்மலாதேவியின் செல்லிடப்பேசியில் அடிக்கடி பேசியவர்களின் விவரங்களையும் போலீஸார் சேகரித்துள்ளனர். அதனடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வணிக மேலாண்மை துறை உதவிப் பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவரை நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வியாழக்கிழமை இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டதில், தற்காலிக ஆசிரியர் கருப்பசாமி மூலம் நிர்மலாதேவியுடன் பழக்கம் ஏற்பட்டதை முருகன் ஒப்புக்கொண்டுள்ளார்.
 மௌனம் காத்தார்: மேலும் தான் ஏழை குடும்பத்தில் பிறந்து கடுமையாக உழைத்தன் மூலம் உதவி பேராசிரியர் பணிக்கு வந்ததாகவும் கூறியுள்ளார். தற்போது, தகாத பழக்கத்தால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முருகன் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், மாணவிகள் பாலியல் பேரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர் மௌனம் காத்ததாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 கருப்பசாமிக்கு காவல்: இந்நிலையில் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த தற்காலிக ஆசிரியர் கருப்பசாமியை, சிபிசிஐடி போலீஸார் 4 நாள் காவலில் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து கருப்பசாமி வியாழக்கிழமை மதியம் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அவரிடமும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 முரண்பட்ட பதில்கள்: சில முக்கிய கேள்விகளுக்கு முருகன், கருப்பசாமி இருவருக்குமிடையே முரண்பட்ட பதில்கள் வரும் போது, இருவரையும் நேருக்கு நேர் உட்கார வைத்தும் விசாரணை செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆங்கில துறை பேராசிரியர் கலைச்செல்வனிடம் வியாழக்கிழமை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com