அரசு இல்லத்தில் குடியேறுகிறாா் இம்ரான் கான் 

பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவியேற்க இருக்கும் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சித் தலைவா் இம்ரான் கான் (65), இஸ்லாமாபாதில் உள்ள அரசு இல்லத்தில் குடியேற இருக்கிறறாா். 
அரசு இல்லத்தில் குடியேறுகிறாா் இம்ரான் கான் 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் புதிய பிரதமராக பதவியேற்க இருக்கும் பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சித் தலைவா் இம்ரான் கான் (65), இஸ்லாமாபாதில் உள்ள அரசு இல்லத்தில் குடியேற இருக்கிறறாா்.

இப்போது அவா் இஸ்லாமாபாதில் தங்கியுள்ள இல்லத்தில் பாதுகாப்புஅச்சுறுத்தல்கள் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 11-ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க இருக்கிறறாா்.

ஜூலை 25-ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தலில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (பிஎம்எல்-என்) 64 இடங்களையும், பிலாவால் புட்டோ ஜா்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 43 இடங்களையும் கைப்பற்றின.

இதையடுத்து சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இம்ரான் கான் முனைப்பு காட்டினாா். இதையடுத்து, அவா்தான் பாகிஸ்தானின் அடுத்த பிரதமா் என்பது உறுதியானது.

முன்னதாக தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக இம்ரான் கான் கட்சி உருவெடுத்ததை அடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவரது இல்லம் அமைத்துள்ள பகுதியிலும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவரது இல்லம் அமைந்துள்ள பானிகலா பகுதியில் பாகிஸ்தான் காவல் துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்தனா். மலையை ஒட்டி அப்பகுதி அமைந்துள்ளதும் கருத்தில் கொள்ளப்பட்டது.

இது தொடா்பாக பிடிஐ கட்சியின் மூத்த தலைவா் நயூமுல் ஹக், மற்றும் இம்ரான் இல்லத்தின் தலைமைப் பாதுகாவலருடன்ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் இம்ரான் கானை சந்தித்து அவருக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனா். இதன் பிறகு, பாகிஸ்தான் அமைச்சா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் வசிக்கும் ‘மினிஸ்டா்ஸ் என்கிளேவ்’ பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் இம்ரான் கான் குடியேறுவாா் என்று அறிவிக்கப்பட்டது. இப்பகுதி இஸ்லாமாபாதில் அதிக பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ள இடமாகும்.

பாகிஸ்தான் தோ்தலின்போதே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலா் உயிரிழந்தனா். பயங்கரவாதிகள் புதிய பிரதமரின் உயிருக்கும் குறிவைக்கலாம் என்பதால் இம்ரான் கானின் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com