மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். 
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சில கருத்துகளை கூறியதாக பெங்களூருவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். 

இதைத்தொடர்ந்து அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்பு வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தார். அதேசமயம், திருமுருகன் காந்தியிடம் போலீஸார் 24 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளலாம், அதற்கு திருமுருகன் காந்தி ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இந்நிலையில், திருமுருகன் காந்தி போலீஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி, திருமுருகன் காந்தி அனுமதி இல்லாமல் பேரணி மூலம் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற குற்றத்துக்காக அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் அடிப்படையில், ராயப்பேட்டை போலீஸார் திருமுருகன் காந்தியை தற்போது மீண்டும் கைது செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com