முதல்வரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய புதுவை ஆளுநர்

மரியாதையற்ற வார்த்தைகள் இருப்பதாகக் கூறி, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி அனுப்பிய கடிதத்தைத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை திருப்பி அனுப்பினார்.
முதல்வரின் கடிதத்தை திருப்பி அனுப்பிய புதுவை ஆளுநர்

மரியாதையற்ற வார்த்தைகள் இருப்பதாகக் கூறி, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி அனுப்பிய கடிதத்தைத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை திருப்பி அனுப்பினார்.
புதுச்சேரியில் கடந்த 4-ஆம் தேதி கள ஆய்வின் போது பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் கிரண் பேடி சமூக வலைதளம் மூலம் எச்சரித்திருந்தார். ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்பட அதிகாரமில்லை. எனவே, அவரது உத்தரவைப் பின்பற்றத் தேவையில்லை என்று அதிகாரிகளுக்கு ஆதரவாக கடந்த 5-ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்தார்.
மூத்த அதிகாரிகள் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதை ஒப்புக் கொள்வார்கள் என்று சமூக வலைதளம் மூலம் கடந்த 6-ஆம் தேதி ஆளுநர் பதிலளித்தார்.
இந்நிலையில், அமைச்சர்களின் ஆலோசனைப்படி செயல்படுவதாக இருந்தால், ஆளுநருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும், அமைச்சரவையின் முடிவின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளதாகவும் கடந்த 10-ஆம் தேதி ஆளுநருக்கு நாராயணசாமி கடிதம் எழுதினார்.
இதையடுத்து, ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: முதல்வர் நாராயணசாமி எனக்கு எழுதிய கடிதம் குறித்து பத்திரிகைகளில் படித்துத் தெரிந்து கொண்டேன். அந்தக் கடிதம் மரியாதையற்ற வார்த்தைகளால் நிரம்பியுள்ளது. அரசியலமைப்பின்படி செயல்படும் முக்கிய அலுவலகத்துக்கு முதல்வர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார். 
எனவே, அந்தக் கடிதம் திருப்பி அனுப்பப்பட்டது. ஏற்கெனவே இதுபோன்ற கடிதங்களை முதல்வர் எழுதியுள்ளார். அது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதுபோன்ற கடிதத்தை இனி அவர் எழுதமாட்டார் என நம்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com