சபரிமலையில் நிறைபுத்தரிசி விழா: தமிழகத்தில் இருந்து நெற்கதிர்கள் ஊர்வலம்

கேரள மாநிலம், சபரிமலையில் நடைபெறும் நிறைபுத்தரிசி விழாவுக்கு தமிழகத்தில் இருந்து நெற்கதிர்கள் கொண்டுசெல்லும் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்கள்.
சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்ட நெற்கதிர்கள்.


கேரள மாநிலம், சபரிமலையில் நடைபெறும் நிறைபுத்தரிசி விழாவுக்கு தமிழகத்தில் இருந்து நெற்கதிர்கள் கொண்டுசெல்லும் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் மலையாள வருட பிறப்புக்கு முன்பு அனைத்துக் கோயில்களிலும் நிறை புத்தரிசி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் விழா மிகவும் புகழ்பெற்றதாகும். அறுவடை செய்யப்படும் முதல் நெற்கதிர்களை சுவாமிக்கு படைத்து வழிபடுவது இங்குள்ள நம்பிக்கை. நிகழாண்டு, வரும் வெள்ளிக்கிழமை ( ஆக. 17) மலையாள வருடம் பிறக்கிறது. இதையொட்டி நடைபெறவுள்ள நிறை புத்தரிசி விழாவுக்காக தமிழகத்தில் இருந்து நெற்கதிர்கள் கொண்டு செல்லப்படுகிறது.
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலுக்கு சொந்தமான வயல்கள் நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் உள்ளன. இங்குள்ள 36 சென்ட் நிலத்தில் தனியாக நெல் பயிரிடப்பட்டிருந்தது. இந்த நெற்கதிர்களை அறுவடை செய்து அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பிறகு, சபரிமலையில் நடைபெறும் நிறை புத்தரிசி விழாவுக்காக சபரிமலை கோயில் நிர்வாகத்தினரும், ஐயப்பன் ஆபரண பெட்டி வரவேற்புக் குழுவினரும் இணைந்து கேரள மாநிலத்திற்கு இந்த நெற்கதிர்களை எடுத்துச் சென்றனர்.
நெற்கதிர்கள் கொண்டுசெல்லப்பட்ட வாகனத்திற்கு கோட்டைவாசலில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் முன் தமிழக - கேரள பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிறகு, ஆரியங்காவு வழியாக ஐயப்பன் கோயிலுக்கு நெற்கதிர்கள் கொண்டுசெல்லப்பட்டன. இதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை நிறை புத்தரிசி விழாவில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பூஜைக்கு பிறகு பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com