சுதந்திர தின தேநீர் விருந்து ரோஜா செடிகளை நட்ட ஆளுநர், முதல்வர்

சென்னையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேநீர் விருந்தின்போது, ஆளுநர் மாளிகை வளாகத்தில் ரோஜா செடிகளை ஆளுநரும், முதல்வரும் நட்டு வைத்தனர்.
ஆளுநர் மாளிகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் ரோஜா செடிகளை நட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,
ஆளுநர் மாளிகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் ரோஜா செடிகளை நட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,


சென்னையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேநீர் விருந்தின்போது, ஆளுநர் மாளிகை வளாகத்தில் ரோஜா செடிகளை ஆளுநரும், முதல்வரும் நட்டு வைத்தனர்.
சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
ஆளுநர் மாளிகையில் மாலை 5.30 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் தனபால், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில ராமாணீ, அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ளது போன்று சென்னை ஆளுநர் மாளிகையிலும் ரோஜா தோட்டம் அமைக்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. அதற்காக ஆளுநர், முதல்வர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் ரோஜா செடிகளை நட்டு வைத்தனர்.
ஆளுநர் நட்ட செடிக்கு கங்கா' என்றும், முதல்வர் நட்ட செடிக்கு காவேரி' என்றும் தலைமை நீதிபதி நட்ட செடிக்கு கோதாவரி' என்றும் பெயரிடப்பட்டது. 
நீதிபதிகள் புறக்கணிப்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் சார்பில் புதன்கிழமை மாலை அளிக்கப்பட்ட தேநீர் விருந்து நிகழ்ச்சியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர். இதன் காரணமாக, நிகழ்ச்சியில் அவர்களுக்காகப் போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாகவே இருந்தன. எனினும் ஆளுநர் அளித்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி தஹில ராமாணீ மட்டும் பங்கேற்றார்.
காரணம் என்ன? சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தஹில ராமாணீ பதவியேற்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மரபை மீறி அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் முன் வரிசைகளில் அமர வைக்கப்பட்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டனர். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்தனர். மரபு மீறல் குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆளுநர் அளித்த சுதந்திர தின தேநீர் விருந்தை நீதிபதிகள் புறக்கணித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com