சுதந்திர தின விழா: ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக...

ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.


ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சுதந்திர தினத்தின் போது தமிழக ஆளுநர் மாளிகையில் தேசியக் கொடியேற்றும் மரபு இதுவரை இருந்தது இல்லை. இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது தனது மாளிகையில் தேசியக் கொடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றினார். அப்போது அவர் நிகழ்த்திய உரை:
ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரம் பெறுவதற்கு எண்ணற்ற தியாக சீலர்களும், விடுதலைப் போராட்ட வீரர்களும் தங்களின் இன்னுயிரை வழங்கி நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் எண்ணற்றவர்கள் உயிர் நீத்தனர். பல இன்னல்களுடன் சுதந்திரம் பெற்றதை உலகமே அறியும். நமது நாட்டில் இப்போது அவரவர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்ப மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதே நேரம், 1947-ஆம் ஆண்டுக்கு முன்பு அடிமை வாழ்வை நமது முன்னோர்கள் அனுபவித்து வந்துள்ளனர்.
தனி மனித வாழ்க்கைக்கு காந்தியடிகள், அப்துல் கலாம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அப்துல் கலாமுடன் ராணுவ ஆலோசனைக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்தியவர். அது போன்றே இங்கே பணியாற்றும் அலுவலர்களும் எளிமையான வாழ்க்கையை நடத்துவதன் மூலம் எண்ணற்ற மகிழ்ச்சியைப் பெறலாம்'' என்றார்.
ஆளுநர் மாளிகைப் பணியாளர்களுக்கு இனிப்புகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் விடுதலைப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ், முன்னாள் முதல்வர் அண்ணா ஆகியோரின் உரைகள் அடங்கிய ஆவணப் படத்தைப் பார்த்தார்.
நிகழ்ச்சியில் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com