மாமல்லபுரத்தில் தேங்கிய மழைநீர்: சுற்றுலாப் பயணிகள் அவதி

மாமல்லபுரம் சுற்றுலா நகரில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்றதால் சுற்றுலா இடங்களைப் பார்வையிட முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 
மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர்.
மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர்.


மாமல்லபுரம் சுற்றுலா நகரில் பெய்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்றதால் சுற்றுலா இடங்களைப் பார்வையிட முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 
மாமல்லபுரத்தில் கடந்த ஒரு சில தினங்களாக தொடர்ந்து லேசாகவும், மிதமாகவும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாமல்லபுரம் பேருந்து நிலையம், சுற்றுலாப் பகுதிகளான அர்ச்சனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. கடற்கரை பகுதியில் கடற்கரை கோயில் பகுதியிலும் மழைநீர் தேங்கியதால் அப்பகுதியைப் பார்வையிட முடியாமல் சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் சென்றனர். சாலைப் பகுதிகள் சேறும் சகதியுமாக இருந்ததால் பொதுமக்கள் மேலும் அவதிக்குள்ளாகினர். இதனால் கடற்கரை பகுதியில் பல கடைகள் மூடப்பட்டே இருந்தன. 
மாமல்லபுரம் பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள், நகரவாசிகள், சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டோர் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், பருவமழை பெய்வதற்குள் மழைநீர் வெளியேற கால்வாய்களை அமைக்கவும், சாலைகளை சீரமைக்கவும் சுற்றுலாத் துறை, தொல்லியல் துறை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஆத்தூர், திம்மாவரம், பாலூர், திருக்கழுகுன்றம், திருப்போரூர் , கல்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளைச்சுற்றிலும் பரவலான மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com