வைகை அணை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
வைகை அணை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தென் மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரி கரையோரங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. 

இந்நிலையில் வைகை அணை பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு தற்போது 4227 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 60 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

71 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம் தற்போது 66 அடியை எட்டியுள்ளதால் வைகையாற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com